உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் கைகோர்ப்பு 24ல் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு அழைப்பு

ப.வேலுார் தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் கைகோர்ப்பு 24ல் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு அழைப்பு

ப.வேலுார், 'ப.வேலுார் டவுன் பஞ்., தலைவருக்கு எதிராக, வரும், 24ல் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்த உள்ளதால், அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என, செயல் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க.,-15, அ.தி.மு.க.,-2, பா.ம.க.,-ஒன்று என, மொத்தம், 18 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர்.இந்நிலையில் தலைவருக்கு எதிராக துணைத்தலைவர் உள்பட, தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ம.க., கவுன்சிலர்கள் என, 17 பேர், கடந்த மாதம், 24ல் செயல் அலுவலர் சண்முகத்திடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர். தொடர்ந்து, கடந்த, 2ல் மீண்டும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, 16 கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.இதையேற்று, 'வரும், 24 காலை, 11:00 மணிக்கு, டவுன் பஞ்., அலுவலகத்தில், தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த, தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என, செயல் அலுவலர் சண்முகம், கவுன்சிலர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், 'டவுன் பஞ்., தலைவர் லட்சுமி, மன்ற தீர்மானங்களின்படி கலெக்டர், டவுன் பஞ்., உதவி இயக்குனர் ஆகியோர் அனுமதி அளித்த பணிகளை செயல்படுத்த அங்கீகாரம் மறுத்து வருவது; கவுன்சிலர்களிடம் மரியாதையின்றி, அதிகாரத்துடன் சுமுகமான போக்கை கடைப்பிடிக்காமல் இருப்பது; தலைவரின் கணவர் முரளி, டவுன் பஞ்., நிர்வாகத்தில் தலையிட்டு முறைகேடாக செயல்பட்டு வருவது; டவுன் பஞ்., விதிமுறைகளை மீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என, கவுன்சிலர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ம.க., கவுன்சிலர்கள் கைகோர்த்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை