உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழந்தைகள் மையத்தை சுற்றி செடி, கொடிகளால் ஆபத்து

குழந்தைகள் மையத்தை சுற்றி செடி, கொடிகளால் ஆபத்து

குழந்தைகள் மையத்தை சுற்றி செடி, கொடிகளால் ஆபத்துகரூர், டிச. 22-கரூர் அருகேயுள்ள, வெண்ணைமலை குழந்தைகள் மையத்தை சுற்றி செடி, கொடிகள் படர்ந்துள்ளது.கரூர் மாவட்டம், காதப்பறை பஞ்.,க்குட்பட்ட வெண்ணைமலை குழந்தைகள் மையத்தில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மையத்தை சுற்றி செடி, கொடிகள் மற்றும் மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.இதனால், அடிக்கடி விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து விடுகின்றன. மேலும், குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். புதர்மண்டி காணப்படும் செடிகளை அகற்ற பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, முட்புதரில் இருக்கும் மையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ