பாசி பயறு காப்பீடு செய்ய 31ம் தேதி வரை அவகாசம்
எருமப்பட்டி, விவசாயிகள் வரும், 31ம் தேதிக்குள் பாசி பயறு காப்பீடு செய்து கொள்ள வேளாண் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது காரீப் பாசி பயறு பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி வரும், 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாசி பயருக்கு பிரீமியம் தொகை ஏக்கர் 1க்கு, 335.92 ரூபாய் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்களில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.