உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தீபாவளி போனஸ் வழங்க கோரி, நாமக்கல் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, கிருஷ்ணாபுரத்தில் செயல்படும் டாஸ்மாக் குடோனில் பணியாற்றும், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் மற்றும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். அதில், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பி.எப்., - இ.எஸ்.ஐ., முறைப்படுத்த வேண்டும். மதுபான விற்பனையை தனியார் மையமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ