உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

வெண்ணந்துார், நவ. 29-பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் ஒன்றியம், ஆயிபாளையம் பால் சொசைட்டி முன், தலைவர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்கி பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு, 54 ரூபாய் வழங்க வேண்டும். மாட்டு தீவனத்தை, 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் ஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை