உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேண்டுதல் நிறைவேற பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்

வேண்டுதல் நிறைவேற பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்

குமாரபாளையம் :குமாரபாளையம், 24 மனை மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்.குமாரபாளையம் அம்மன் கோவில்களில், ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. ஆடி அமாவாசை நாளான நேற்று, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் சார்பில் பக்தி இசை பாடல்கள் பாடப்பட்டன. கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கள் வேண்டுதல் நிறைவேற, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை