உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பேரிடர் மேலாண்மை பயிற்சி

பேரிடர் மேலாண்மை பயிற்சி

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த தனியார் கல்லுாரியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவியர் முன்னிலையில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு; வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அதிகளவு மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது அதில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது; வெள்ளத்தில் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களை எவ்வாறு தங்களை தற்காத்துக்கொண்டு பொதுமக்களை மீட்பது என்பது குறித்து பயிற்சியளித்தனர். விபத்து காலங்களில் எவ்வாறு தீயணைப்புத்துறை, பிற துறைகளை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைப்பது; தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன; தீ விபத்து ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வு, ஒத்திகையை, ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் பணியாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை