உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டாஸ்மாக்கில் தகராறு; 6 பேர் மீது வழக்கு

டாஸ்மாக்கில் தகராறு; 6 பேர் மீது வழக்கு

புதுச்சத்திரம்: ராசிபுரம் அருகே, பிள்ளாநல்லுாரை சேர்ந்தவர் சரவணன், 42; கூலித்தொழிலாளி. இவர், நேற்று பிள்ளாநல்லுார் ஏரிக்கரையில் உள்ள மதுபான கடையில் மது குடித்துள்ளார். அப்போது, அருகே அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன், தமிழ்‍செல்வன், வெற்றி, மணி உள்ளிட்டோருக்கும், சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகார்படி, 5‍ பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், வேல்முருகன் கொடுத்த புகார்படி, சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி