உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டாஸ்மாக் கடையில் தகராறு: ஒருவர் கைது

டாஸ்மாக் கடையில் தகராறு: ஒருவர் கைது

ப.வேலுார், ப.வேலுார் அருகே, குப்பிச்சிபாளையம், குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்த சங்கர் மகன் மோகன் பாபு, 20; தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பொய்யேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக சங்கர் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சீரங்கன் மகன் சிவா, 24, என்பவர், போதை தலைக்கேறிய நிலையில் அங்கு வந்த சங்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து வந்த மோகன் பாபு, தந்தை சங்கரை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளார். போதையில் இருந்த சிவா, பீர் பாட்டிலை எடுத்து மோகன் பாபு தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த மோகன் பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகார்படி, சிவாவை ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை