குதிரைகளால் போக்குவரத்து இடையூறு; விபத்து அபாயம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், குதிரைகளால் போக்குவரத்துக்கு இடை-யூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் காத்திருக்கிறது.இரண்டு மாதங்களுக்கு முன், குமாரபாளையம் அருகே ஆலங்-காட்டுவலசு விவசாயி தேவராஜ் என்பவரின் கரும்பு பயிர்-களை, இரவில் வந்த குதிரைகள் மேய்ந்து விட்டு சென்றுள்ளன. நேற்றுமுன்தினம், கோட்டைமேடு பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் நெல் நாற்றங்கால்களில் நெல் நாற்று பயிரை மேய்ந்து விட்டு நாசப்படுத்தி சென்றுள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் குதிரைகளை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சேலம் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள், சில நேரங்களில் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றன. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்-துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. விபத்துகளும் நடக்கும் என்பதால், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.