உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருமணிமுத்தாற்றில் சாக்கடை, சாயக்கழிவு நீரால் அதிருப்தி

திருமணிமுத்தாற்றில் சாக்கடை, சாயக்கழிவு நீரால் அதிருப்தி

மல்லசமுத்திரம்: திருமணிமுத்தாற்றில் ஏற்பட்டுள்ள, வெள்ளப்பெருக்கில் நுரை ததும்பிய நிலையில் சாக்கடை கழிவுநீர் செல்வதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு உற்பத்தியாகி சேலம் நகரப்பகுதி, ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, மாமுண்டி, ஆத்துமேடு, எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் வழியாக வந்து, இறுதியாக பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் கலக்கிறது.இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் சாக்கடை மற்றும் சாயக்கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் கருநிறத்துடனும், ரசாயன நுரையுடன் செல்கிறது. குறிப்பாக, திருமணிமுத்தாறு பாசனத்தை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. சாக்கடை, சாயக்கழிவுநீர் கலந்து வருவதால் தண்ணீரின் புனித தன்மைமாறி, விஷமாக மாற வாய்ப்புள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் விவசாயிகளுக்கு பலனளிக்காத வகையில் உள்ளது. இதனால், விவசாயிகள், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !