உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட டேக்வாண்டோ ஆண்கள் அணி பங்கேற்பு

மாவட்ட டேக்வாண்டோ ஆண்கள் அணி பங்கேற்பு

நாமக்கல், நவ. 30-பாரதியார் தினம், குடியரசு தின விளையாட்டு போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தன.அதில், மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. 33க்கும் மேற்பட்ட எடை பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மோதினர். முதலிடம் பிடித்த மாணவர்களை, பயிற்சியாளர்கள் மூலம் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன், உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன், கலைச்செல்வி ஆகியோர் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை