மேலும் செய்திகள்
வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம்
03-Nov-2024
குமாரபாளையம்: குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் துகில், 13. இவர், கடலுாரில் உள்ள அரசு நகராட்சி மேல்நிலை பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்மேட்டூரில் நடந்த, இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய மல்யுத்த போட்டியில், 14 வயது பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவில் தேர்வாகி, வரும், 15ல் டில்லியில் நடைபெறும் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த மாணவரை ஊர் முக்கியஸ்தர்கள் பாராட்டினர்.1.50 லட்சம் மின் இணைப்புகளைஉடனே வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்நாமக்கல்:'தமிழகத்தில் காத்திருப்பில் உள்ள, 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும்' என, நாமக்கல்லில் நடந்த பாரதிய கிசான் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல்லில், நேற்று நடந்த பாரதிய கிசான் சங்க மாவட்ட மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். அகில பாரத துணைத்தலைவர் பெருமாள் பங்கேற்றார். அவர் பேசுகையில், ''பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட மாநாடு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. முதல் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடந்துள்ளது. மாநில மாநாடு விரைவில் மதுரையில் நடக்க உள்ளது. அகில பாரத மாநாடு, குஜராத் மாநிலத்தில் பிப்., 19, 20, 21ல் நடக்க உள்ளது. மின் இணைப்பு கேட்டு, 1.50 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். காத்திருப்பில் உள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும். திருமணிமுத்தாறு காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கொல்லிமலையில் மூலிகை மருத்துவ பயிர்களை பயிரிடுவதற்கான பயிற்சிகளை பழங்குடியின மக்களுக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.முனியப்ப சுவாமிக்குசிறப்பு அபிஷேகம்வெண்ணந்துார்:வெண்ணந்துாரில் பிரசித்தி பெற்ற ஐந்து முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று ஐப்பசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையெட்டி, மூலவர் முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் நடந்தது.இதில், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், நேர்த்திக்கடனாக ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். பின் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு விருந்தளித்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
03-Nov-2024