உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க கோட்ட பொறியாளர் உத்தரவு

நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க கோட்ட பொறியாளர் உத்தரவு

நாமக்கல்:நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட, திருச்செங்கோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம், பள்ளிப்பாளையம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட, ஓமலுார் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலையில், முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் முதல், சித்தாளந்துார் வரை, 9.15 கி.மீ., துாரத்திற்கு, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு, 59.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, இரண்டு மாதத்திற்கு முன், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதையடுத்து, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, 9 கி.மீ., துாரத்தில், மழைநீர் வடிகால் கட்டுதல், சிறு பாலங்கள் அகலப்படுத்துதல், சாலை அகலப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், மீன் கிணறு பகுதியில், நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா, நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தினார். உதவி கோட்ட பொறியாளர் நடராசன், உதவி பொறியாளர் பிரதீப் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ