உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளி சீருடை வழங்கல்

தீபாவளி சீருடை வழங்கல்

பள்ளிப்பாளையம், எலந்தகுட்டை பஞ்சாயத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு சீருடை வழங்கப்பட்டது.பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட எலந்த குட்டை பஞ்சாயத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகளை, பள்ளிப்பாளையம் மத்திய ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் செல்வம் வழங்கினார். இதில் பொது சுகாதாரம் மற்றும் ஆண், பெண் துாய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடைகள், இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பணி செய்யும் போது பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து செயலாளர் சுகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி