மேலும் செய்திகள்
ரூ. 10 லட்சம் நிவாரணம் முதல்வர் வழங்கல்
24-Sep-2025
நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த, தி.மு.க., உறுப்பினரின் வாரிசுகளுக்கு, அக்கட்சி சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்., பேரம்மாவூரை சேர்ந்தவர் சரண்ராஜ், 39; தி.மு.க., உறுப்பினர். கடந்த ஜூன், 2ல் வீசாணம் பிரிவு ரோடு அருகே டூவீலரில் சென்றபோது, லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். அவரது வாரிசுகளான மகள் ரோஷினி, 14, மகன் அகிலன், 12, ஆகியோருக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிவாரண இழப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் வழங்கினார்.அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, ராஜா, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
24-Sep-2025