உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வையப்பமலையில் நாய்கள் அட்டகாசம்

வையப்பமலையில் நாய்கள் அட்டகாசம்

மல்லசமுத்திரம், வையப்பமலை பஸ் நிறுத்தம், மல்லசமுத்திரம் சாலை, சந்தைப்பேட்டை, பெரியமணலி சாலை உள்ளிட்ட பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக செல்வதால், வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் பிடிக்க முடியாமல் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், பெண்கள் நாய்களை பார்த்தால் அலறிக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். எனவே, இந்த தெருநாய்களை பிடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !