உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு

ப.வேலுார், டிச. 2--ப.வேலுார் சுல்தான் பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, பரமத்தி, ப.வேலுார்,மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவர். ஆனால், தொடர் மழையால் நேற்று கூடிய வாரச்சந்தையில், குறைந்த அளவிலேயே நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது. நேற்று, கிலோவுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 550 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை