உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி துவக்கம்

ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி துவக்கம்

எருமப்பட்டி ‍எருமப்பட்டி டவுன் பஞ்., குடிநீர்‍ தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காவிரி ஆற்றில் இருந்து புதிதாக கிணறு வெட்டி, புதிய குடிநீர் பைப்லைன் கொண்டு வந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தமிழக அரசு, 3.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, எருமப்பட்டி முருகன் கோவில் அருகில் நடந்தது. அட்மா குழு தலைவர் பாலசுப்பரமணி தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். ராஜேஸ்குமார் எம்.பி., பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். செயல் அலுவலர் யவனாராணி, துணைத்தலைவர் ரவி, இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ