எமர்ஜென்சி பைப் மூடாததால் வீணாக வெளியேறிய குடிநீர்
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரிக்கு முன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஓடைநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு கீழே மேட்டூர் கூட்டு குடிநீர் பைப்புகள் அமை க்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் பைப்புகளில் தற்போது தண்ணீர் திறந்துவிட்டு பைப்புகளை சரிபார்த்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று பாலத்திற்கு கீழே உள்ள எமர்ஜென்சி பைப்பை மூடாமல் தண்ணீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாலத்திற்கு அடியில் உள்ள பெரிய குழாயில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வேகமாக வெளியேற தொடங்கியது. அப்பகுதியில் உள்ள ஓடை நிரம்பி ஏரிக்கு தண்ணீர் செல்லும் அளவிற்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இரவு படிப்படியாக தண்ணீர் குறைந்தது. தண்ணீர் வருவதை பார்க்க இப்பகுதியில் மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.