உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை கடத்தி வந்த கார் மரத்தில் மோதி டிரைவர் பலி

புகையிலை கடத்தி வந்த கார் மரத்தில் மோதி டிரைவர் பலி

நாமக்கல், பெங்களூருவில் இருந்து, 200 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார், சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 5:3-0 மணிக்கு, கார் ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், காரின் முன்பகுதி நொறுங்கி, காரை ஓட்டி வந்த வடமாநிலத்தை சேர்ந்த, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நசுங்கி பலியானார். மற்றொருவர், லேசான காயங்களுடன், வாகனத்தில் சிக்கி கொண்டார்.அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் அவர் மாயமானார். நல்லிபாளையம் போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காரில் சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 200 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, மாயமான வாலிபரை பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை