உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டுச்சாவடி மையத்தை ஆய்வு செய்த டி.எஸ்.பி.,

ஓட்டுச்சாவடி மையத்தை ஆய்வு செய்த டி.எஸ்.பி.,

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் ஓட்டுச்சாவடி மையத்தில், டி.எஸ்.பி., இமயவரம்பன் ஆய்வு செய்தார்.தமிழகம் முழுதும், நேற்று லோக்சபா தேர்தல் நடந்தது. அதன்படி, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வயதான முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் ஓட்டளிக்க வந்தார். தேர்தல் பணியில் இருந்த சக போலீசாரை அழைத்து, அந்த முதியவருக்கு ஓட்டுச்சாவடி மையத்திற்கு செல்ல ஏதுவாக, சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்து கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !