போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., ஆய்வு
ப.வேலுார் ;ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், டி.எஸ்.பி., சங்கீதா ஆய்வு மேற்கொண்டார்.பரமத்தி வேலுார் உட்கோட்டத்திற்குட்பட்ட ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆண்டுதோறும் டி.எஸ்.பி., ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி டி.எஸ்.பி., சங்கீதா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விபரம் உள்ளிட்டவகளை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். இன்ஸ்பெக்டர் இந்திராணி, எஸ்.ஐ., சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.