உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, லாரி மோதி முதியவர் பலியானார்.குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்த மணி, 65, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழில் விஷயமாக வெளியில் சென்று விட்டு, இவர் நேற்று காலை, 7:00 மணியளவில் பல்லக்காபாளையம் லேத் பட்டறை அருகே, டி.வி.எஸ். 50 மொபட் அருகே நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக பின்னால் வந்த லாரி, இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனர் சங்ககிரி, குப்பனுாரை சேர்ந்த மோகன்ராஜ், 22, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி