மேலும் செய்திகள்
பைக் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி
26-Feb-2025
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே மேல்சாத்தம்பூர் செல்லப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 70; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, இரும்புபாலம் அருகே சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பொன்னுசாமி உயிரிழந்தார். விபத்து குறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Feb-2025