சாலை விபத்தில் முதியவர் பலி
ப.வேலுார்: பரமத்தி அருகே, புலவர்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 65; கல்யாண ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்-தினம் மாலை, இருசக்கர வாகனத்தில் கீரம்பூர் நான்கு ரோடு பிரிவு சந்திப்பில், சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து கரூர் சென்ற கார் மோதி துாக்கி வீசியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், கணேசனை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கணேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.