உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, படமுடிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 70; பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவர், ப.வேலுாரில் இருந்து பைபாஸ் சாலையில் படமுடி பாளையம் நோக்கி, சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார், பைபாஸில் உள்ள தனியார் பள்ளி அருகே, முத்துசாமி சென்ற சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு முத்துசாமி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபு சஞ்சய், 37, என்பவரை, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி