ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை
சேந்தமங்கலம்ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கொல்லிமலைக்கு இன்று, நாளை தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். கூட்டம் அதிகமிருந்தால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது மிகவும் கடினம் என்பதால், அசம்பாவிதத்தை தவிர்க்க, இன்று, நாளை ஆகிய, இரண்டு நாட்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து, வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.