உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இ.பி.எஸ்., பிரசாரம் ஆலோசனை கூட்டம்

இ.பி.எஸ்., பிரசாரம் ஆலோசனை கூட்டம்

நாமக்கல், இ.பி.எஸ்., பிரசாரம் மேற்கொள்வதையொட்டி நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.-அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில், இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். நாளை, நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பு பகுதியில், மாலை, 5:00 மணியளவில் பிரசாரம் செய்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது மற்றும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது.மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ரவி, ராஜா என்ற செல்வகுமார், பேரூர் செயலாளர் ராஜவடிவேல் மற்றும் நாமக்கல் நகர அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !