மேலும் செய்திகள்
சமக்கல்விக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்
10-Mar-2025
ராசிபுரம்: புதிய கல்வி கொள்கையில் உள்ள, 'மும்மொழி' பாடத்திட்டத்திற்கு, தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால், பா.ஜ., மட்டும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. மேலும், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற பெயரில் நடக்கும் இந்த இயக்கத்திற்கு, மாணவ, மாணவியர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று, ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட்டில், ராசிபுரம் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு சென்றனர்.
10-Mar-2025