மேலும் செய்திகள்
லாரி மோதி முதியவர் பலி
02-Jul-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, தட்டாங்குட்டை பஞ்.,க்குட்பட்ட பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 62; விவசாயி. இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு, தன் தோட்டத்தில் உள்ள, 40 அடி உயர தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியுள்ளார். தென்னை மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பது தெரியாமல், தேங்காயை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, கூடு கலைந்து பறந்து வந்த தேனீக்கள், சக்திவேலை மாறி மாறி கொட்டியுள்ளன. உயரமாக இருந்ததால், குதிக்க முடியாமல் தவித்துள்ளார். பின், ஒரு வழியாக, தேனீக்களிடம் கொட்டு வாங்கியபடியே கீழே இறங்கி வந்தார். அங்கு மயக்கமடைந்த அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டியதால், சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Jul-2025