சாலை விபத்தில் விவசாயி பலி
மோகனுார், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒருவந்துார் ஊராட்சி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 65, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, மோகனுாரில் இருந்து வீட்டிற்கு தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். காட்டுப்புத்துார் சாலை பொய்யேரி கரை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலை பாதுகாப்பு தடுப்பில் மோதி நிலைதடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.