மேலும் செய்திகள்
விபத்தில் பெயின்டர் உயிரிழப்பு
29-Aug-2025
நாமக்கல், சேந்தமங்கலம் அருகே, கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 59; விவசாயி. கடந்த, 20ல் கணக்கம்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்கு மொபட்டில் சென்றார். பின், அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது பின்னால் வந்த பைக், இவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன், நேற்று காலை பரிதாபமாக இறந்தார். நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Aug-2025