உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓடையை துார்வார விவசாயிகள் கோரிக்கை

ஓடையை துார்வார விவசாயிகள் கோரிக்கை

நாமகிரிப்பேட்டை'நாமகிரிப்பேட்டை யூனியன், பச்சுடையாம்பாளையம் பஞ்., எல்லை முடியும் பகுதியில், கொல்லிமலை அடிவாரம் உள்ளது.இப்பகுதியில் உள்ள ஓசக்கரையான் ஊற்று, குருவாளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், சாலையோரம் உள்ள ஓடை வழியாக சென்று, பச்சுடையாம்பாளையம் பஞ்.,ல், பேளுக்குறிச்சி செல்லும் சாலையை கடந்து தொப்பப்பட்டி வரை செல்கிறது.இந்த நீரோடையில், பேளுக்குறிச்சி சாலைக்கு கிழக்குபுறமாக உள்ள ஓடையை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான, 100 நாள் வேலை திட்டத்தில் சுத்தம் செய்துள்ளனர்.எவ்வித முட்புதர்களும் இன்றி, தண்ணீர் வேகமாக செல்லவும், தண்ணீர் தேங்கி நிற்கவும் ஓடை சுத்தமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே ஓடை, பேளுக்குறிச்சி சாலைக்கு மேற்கு பக்கம் பெரும் புதராக காட்சியளிக்கிறது. மழைநீர் செல்ல இந்த ஓடைக்கு பேளுக்குறிச்சி சாலையில் பாலமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மழைநீர் பாலத்தை தாண்டி செல்ல வாய்ப்பில்லை. ஒரே ஓடையில் ஒரு பகுதி சுத்தமாகவும், மறு பகுதி மிகவும் மோசமாகவும் உள்ளது. எனவே, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ஓடையின் மற்றொரு பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !