உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரவள்ளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

மரவள்ளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியான பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், திருமலைப்பட்டி, கண்ணுார் பட்டி, மின்னாம்பள்ளி, கொல்லிமலை வட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை, ஆத்துார், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர். மரவள்ளி கிழங்கிற்கு, மாவுச்சத்து, புள்ளி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம், மரவள்ளி ஒரு டன், 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டன்னுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்து, 7,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'சிப்ஸ்' மரவள்ளி கிழங்கு, கடந்த வாரம் டன், 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது, மேலும், 1,000 ரூபாய் உயர்ந்து, 11,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி