மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் அவதி
23-Oct-2025
வெண்ணந்துார், வெண்ணந்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கறிவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கறிவேப்பிலை அதிக மணமும், மருத்துவ குணமும் உடையதாக கருதப்படுவதால், இப்பகுதி விவசாயிகள் கறிவேப்பிலையை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். வெண்ணந்துார் அருகே, ஓ.சவுதாபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கறிவேப்பிலை சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கறிவேப்பிலை விவசாயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கறிவேப்பிலை செடிகள் மழைக்காலத்தில் தான் நன்கு செழித்து வளரும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இருந்தாலும் தற்போது மழை பெய்வதால், இந்தமுறை செடிகள் நன்கு அடர்த்தியாக வரும் என, எதிர்பார்த்துள்ளோம். இரண்டு மாதங்களுக்கு முன் கறிவேப்பிலை அறுவடை செய்யப்பட்ட பின், தற்போது தான் மீண்டும் இலைகள் வளர தொடங்கியுள்ளன. களை செடிகளை அகற்றி, தண்ணீர் கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
23-Oct-2025