மேலும் செய்திகள்
சேதமடைந்த சிமென்ட் சாலை சூணாம்பேடு மக்கள் அவதி
08-Jul-2025
நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், சேதமடைந்துள்ள கிராமத்து சாலையால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி, ஆத்துார் பிரதான சாலையில் அமைந்துள்ளது. அங்கிருந்து வேப்பிலைக்குட்டை செல்லும் கிராமத்து சாலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது தொடர் மழை, கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால், கொஞ்சம் கொஞ்சமாக சாலை சேதமடைந்து வருகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள குழியில், மழைநீர் தேங்கி நிற்பதுடன், சாலை முழுதும் பெயர்ந்து ஜல்லி கற்களாக மாறிவிட்டது. வேப்பிலைக்குட்டை வரை, 3 கி.மீ., துாரத்திற்கு சாலை சேதமடைந்துள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.பள்ளி மாணவர்கள், விவசாயிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, சாலையை தரம் உயர்த்தி சீரமைக்க வேண்டும் அல்லது புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
08-Jul-2025