உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை கடன் பிரச்னையால் விபரீத முடிவு

3 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை கடன் பிரச்னையால் விபரீத முடிவு

நாமகிரிப்பேட்டை:கடன் பிரச்னையால், தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை, வேம்பாகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 35; ரிக் வண்டி மேலாளர். இவரது மனைவி பாரதி, 28; தம்பதியருக்கு பிரதிக்ஷாஸ்ரீ, 10, ரித்திகாஸ்ரீ, 7, தேவஸ்ரீ, 6, என, மூன்று மகள்களும், அனீஸ்வரன், 2, என்ற மகனும் இருந்தனர். இவரது மூன்று மகள்களும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். கோவிந்தராஜூக்கு வீடு கட்டிய வகையில், 17 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது. அதேபோல், பாரதியும், மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார். குறைந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த கோவிந்தராஜ், கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது வருத்தப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மனைவி, மகன் துாங்கிய படுக்கையறை கதவை கோவிந்தராஜ் வெளியே பூட்டினார். பின், ஹாலில் படுத்திருந்த தன் மூன்று மகள்களையும், வீட்டிலிருந்த கொடுவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தானும் இறந்துள்ளார். அதிகாலை கதவை உடைத்து வெளியே வந்த பாரதி, குழந்தைகள், கணவர் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை