சாலை விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்
ப.வேலுார்:ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வாகனங்களை சிறப்பு சோதனை செய்ய நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் அறிவுறுத்தல்படி, பரமத்தி பைபாஸ் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் வாகனங்களை சிறப்பு சோதனை மேற்கொண்டார்.இதில், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதமாக, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறிய, 10 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டது.தொடர்ந்து, 18 வயது நிரம்பாத சிறார்கள் டூவீலர் ஓட்ட அனுமதித்தால், சிறார்களின் பெற்றோர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என, பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.