உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

நாமக்கல், நாமக்கல் நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.நாமக்கல் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், விளம்பர பலகைகளை அகற்றவும் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் போக்கு வரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் குணசிங், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் நேற்று பரமத்தி சாலை, கோட்டை சாலை, மோகனுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளுக்கு முன் வைக்கப்பட்டு இருந்த விளம்பர போர்டுகளை அகற்றி, ரெக்கவரி வேனில் ஏற்றி சென்றனர்.இதேபோல் சாலையோரங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தலா, 500 ரூபாய் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட விளம்பர பலகைகளை, இனிவரும் காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்க மாட்டோம் என எழுதி கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !