தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
ராசிபுரம்: பருவமழையில் பொது இடங்களில், வீடுகளில் கவனமாக இருப்பது குறித்தும், தீபாவளி பண்டிகையை முன்னெச்சரிக்கையாக கொண்டாடுவது குறித்தும், தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி ராசிபுரம், அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மழை காலங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, மழை வெள்ளத்தில் தப்பிப்பது குறித்து, ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி விளக்கமாக கூறினார். மேலும், பேரிடர் காலத்தில் வரும் பிரச்னைகள் குறித்தும், அதில் இருந்து தப்பிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.