பட்டாசு தீப்பொறியால் வைக்கோலில் தீ விபத்து
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்; இவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை, வீட்டின் அருகே சேமித்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் இருந்து வெளியேறிய தீப்பொறி வைக்கோலில் பட்டு தீப்பற்றியது. இதையறிந்த சந்தோஷ்குமார், வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய(பொ) அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாதியளவுவைக்கோல் எரிந்து சாம்பலானது.