மேலும் செய்திகள்
ஒரு நாடு, ஒரு தேர்தல் மசோதா தாக்கல்
18-Dec-2024
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதாவை ஆய்வு செய்யும், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.பார்லிமென்ட், மாநில சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழி செய்யும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா', குளிர்கால கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. உடனடியாக, ஜே.பி.சி., எனப்படும், பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பா.ஜ., மூத்த எம்.பி., பி.பி.சவுத்ரி தலைமையிலான இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த குழுவில் மொத்தம் 39 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 27 பேர் லோக்சபா எம். பி., க்கள். 12 பேர் ராஜ்ய-சபா எம்.பி.,க்கள். நேற்றைய கூட்டம் துவங்கியதுமே, மசோதா குறித்து மத்திய சட்டத்துறை மற்றும் சட்டக்குழு உயரதிகாரிகள் விளக்கிப் பேசினர்.அப்போது, இந்த சட்டமசோதா குறித்து, 18,000 பக்கங்கள் கொண்ட, 'பவர் பாய்ண்ட் பிரசென்ட்டேஷன்' அறிக்கையை தாக்கல் செய்து, மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்-கினர்.பின், ஒவ்வொரு எம்.பி.,க்கும், பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, திரிணா முல் காங்., எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசு-கையில்,''தேர்தல் செலவுகளை குறைப்பதற்காகத்தான் இந்த மசோதா என்று கூறுகின்றனர்.இந்த காரணத்திற்காகத்தான் மசோதா கொண்டுவரப்படுகிறதா? மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கபடும் என்றும் கூறு-கின்றனர். இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது'' என்றார்.காங்கிரஸ் எம்.பி., க்கள் மணீஷ் திவாரி மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோரும் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினர்.'காங்., - எம்.பி., பிரியங்கா பேசுகையில்,''ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா, முற்றிலும் கேள்விக்குரியது. பல்வேறு சந்தே-கங்களை கிளப்புகிறது. தேர்தல் செலவுகளை இம்மசோதா எப்-படி குறைத்துவிடும்? செலவுகளை குறைப்பது மட்டும்தான், இதன் நோக்கம் என்றால், என்னால் நம்ப முடியவில்லை'' என்றார்.தி.மு.க., சார்பில் செல்வகணபதியும், வில்சனும் வந்திருந்தனர். வில்சன் பேசுகையில்,''இம்மசோதா தொடர்பாக, ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் அப்ப-டியே இந்த மசோதா இருக்குமா. அல்லது, சட்டக்குழு சார்பில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்படுகிறதா'' எனக்கேட்டார்.--- நமது நிருபர்- -
18-Dec-2024