உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கு தி.மு.க., நிர்வாகி உட்பட ஐவர் கைது

நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கு தி.மு.க., நிர்வாகி உட்பட ஐவர் கைது

நாமக்கல்:நிதி நிறுவன அதிபர் கொலையில், தி.மு.க., இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் உட்பட ஐவரை போலீசார் கைது செய்தனர். நா மக்கல், மோகனுார் சாலையில் ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 40. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு மித்ரன், 7, என்ற மகன், ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளனர். நாமக்கல், சேலம் சாலையில் அருள்தாஸ் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஆக., 5ல், வீட்டின் அருகே சரக்கு ஆட்டோவில் காத்திருந்த நான்கு பேர் கும்பல், அருள்தாஸை வெட்டிக் கொன்றது. விசாரணையில், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான, நாமக்கல் மாவட்ட தி.மு.க., இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் கார்த்திக், 42, உள்ளிட்ட ஐந்து பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவருடன். வடுகபட்டி டிரைவர் ரமேஷ்குமார், 40, சேலம் மின்னாம்பள்ளி டிரைவர் ராஜசேகரன், 27, நாமக்கல் டிராவல்ஸ் அதிபர் வீரக்குமார், 39, ராசிபுரம் கோனேரிப்பட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கூறியதாவது: கார்த்திக்கிடம், 2022ல் அருள்தாஸ், 42 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். தன் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து, கார்த்திக் பணம் கொடுத்துள்ளார். 20 நாட்களில் தந்து விடுவதாக கூறிய அருள்தாஸ், பணத்தை தரவில்லை. வங்கியில் இருந்து ஜப்தி நோட்டீஸ் வந்துள்ளது. வருமானம் இன்றி தவித்த நிலையில், தன் தாய்க்கு அறுவை சிகிச்சைக்கு, 30,000 ரூபாய் கேட்டும், அருள்தாஸ் கொடுக்கவில்லை. இதில், ஆத்திரமடைந்த கார்த்திக், வெங்காயம் விற்பனை செய்வதுபோல், 'டாடா ஏஸ்' வாகனத்துடன் சம்பவத்தன்று அருள்தாஸ் வீட்டு அருகில் காத்திருந்தார். அப்போது, வீட்டுக்கு வந்த அருள்தாஸை வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ