கத்தாரை தொடர்ந்து ஓமனும் முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுப்பு; துறைமுகம் மற்றும் நடுக்கடலில் 1.90 கோடி முட்டைகள் தேக்கம்
நாமக்கல்: கத்தார் நாட்டை தொடர்ந்து ஓமன் நாடும், இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், துறைமுகம் மற்றும் நடுக்கடலில், 1.90 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. இதனால், முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்-ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்-கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி, 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி-நாடு, வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தார் அரசு, இரண்டு மாதங்களுக்கு முன், எடை குறைந்த முட்-டைகளுக்கு தடை விதித்தது. இதனால், நாமக்கல் முட்டை ஏற்று-மதியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பாதிப்பு மறைவ-தற்குள், ஓமன் நாடும், இந்திய முட்டைகளுக்கு புதிய இறக்குமதி வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, துாத்துக்குடி, கொச்சியில் இருந்து ஓமனுக்கு, 45 கன்டெய்னர்-களில் அனுப்பப்பட்ட முட்டைகளை இறக்க அந்த நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. இதனால், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.20 கோடி முட்டைகள் கன்டெய்னரில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்-டுள்ளன. ஓமன் நாட்டின் அறிவிப்பால், முட்டை ஏற்றுமதி மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்களின் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் செந்தில் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தார், துபாய், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு மட்டும் மாதம், 10 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. இதில், ஓமன் நாட்டிற்கு, 50 சதவீதம், கத்தார் நாட்டிற்கு, 20 சதவீதம், பிற நாடுகளுக்கு இதர முட்டைகளும் அனுப்பப்பட்டு வந்தது. இதற்கிடையே, கத்தார் நாடு, இந்திய முட்டை இறக்குமதிக்கு திடீரென கட்டுப்-பாடு விதித்தது. அதனால், அங்கு செல்லும் முட்டைகளின் எண்-ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது, ஓமன் நாடும் திடீ-ரென கடந்த சில நாட்களாக இந்திய முட்டைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் அந்த நாட்டுக்கு, 40 கன்டெய்னர்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட, 1.90 கோடி முட்டைகள் துறைமுகங்கள் மற்றும் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஓமன் நாடு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்-வதை கடந்த ஜூனில் திடீரென நிறுத்தி கொண்டது. பல்வேறு கட்ட முயற்சிக்கு பின், கடந்த செப்., முதல் வரையறுக்கப்பட்ட அனுமதியுடன் மீண்டும் அனுமதி வழங்கியது. அந்நாட்டின் முன்-அனுமதி பெற்ற பின்பே முட்டைகளை ஏற்றுமதி செய்து வரு-கிறோம். அனுமதி கொடுத்த முட்டைகளையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளதால் என்ன செய்வது என எங்களுக்கு தெரிய-வில்லை. மத்திய அரசு தலையிட்டு, 40 கன்டெய்னர்களில் உள்ள முட்டைகளை உடனடியாக இறக்குமதி செய்ய உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கம்போல் ஓமன் நாட்-டிற்கு முட்டைகள் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.