உணவு பாதுகாப்பு அலுவலர் மீன் கடைகளில் ஆய்வு
ப.வேலுார்: ப.வேலுார் வாரச்சந்தையில், விற்கும் மீன்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் வாழைத்தார் மார்க்கெட்டின் ஒரு பகுதியில், மீன் சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தலைமையில், 12 மீன் கடைகளில் ஆய்வு செய்தனர்அப்போது, உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெறாமல் இயங்கிய அனைத்து மீன் கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மீன் கடை வியாபாரிகள் மருத்துவ சான்று மற்றும் பார்மலின் போன்ற ரசாயனம் கலக்காத மீன்களை விற்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது.மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், 1 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.