உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழிலாளிக்கு வீடு கட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

தொழிலாளிக்கு வீடு கட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

பள்ளிப்பாளையம், டிச. 4--ஆனங்கூர் பகுதியில் ஏழை தொழிலாளி ஒருவருக்கு, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி மற்றும் தன்னார்வலர்கள், புதிய வீடு கட்டி அதற்கான சாவியை வழங்கினர்.பள்ளிப்பாளையம் அருகே, ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 40; இவரது மனைவி ரேணுகாதேவி, 35. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன்ராஜ், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். ரேணுகாதேவி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.மோகன்ராஜ் குடும்பத்தின் நிலைமையை அறிந்த, ஆனங்கூர் பஞ்., தலைவர் சிங்காரவேலு முயற்சி யால், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டினர். தொடர்ந்து, புதிய வீட்டிற்கான சாவியை, நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி, ரேணுகாதேவியிடம் ஒப்படைத்தார். அப்போது, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ