உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகனத்தில் மணல் கடத்திய மாஜி ராணுவ வீரர் கைது

வாகனத்தில் மணல் கடத்திய மாஜி ராணுவ வீரர் கைது

டி.என்.பாளையம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே, பங்களாபுதுார் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு சரக்கு வாகனத்தில், ஏராளமான மணல் மூட்டை இருந்தது. வேன், அதில் வந்த நான்கு பேரை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.இதில் கள்ளிப்பட்டி அடசபாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன், 35; கணக்கம்பாளையம் புதுகாலனி சுரேந்திரன், 45; சென்னை வில்லிவாக்கம் சசிக்குமார், 28; அடசபாளையம் தமிழ்செல்வன், 21, ஆகியோர் என்பது தெரிய வந்தது.கள்ளிப்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் மணலை திருட்டுத்தனமாக அள்ளியுள்ளனர். அதை மூட்டை கட்டி வாகனத்தில் கடத்திச்சென்று ஒரு மூட்டை, 120 ரூபாய் என்ற விலையில் விற்று வந்ததும் தெரிய வந்தது. வாகனத்துடன் நான்கு பேரையும் கைது செய்தனர். முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன், பல ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை