மாவட்டத்தில் 10,061 மாணவருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநக-ராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 339 மாணவ, மாணவியருக்கு, 16.36 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:கல்வி செல்வம் ஒன்றே, ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி மாணவ, மாணவியரின் நலன் கருதி, மாணவியர் உயர்கல்வி பயில மாதம், 1,000 ரூபாய் வழங்கும் புது-மைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்-தப்பட்டுள்ளது.சைக்கிள் பெறும் மாணவ, மாணவியர் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். அரசின் பல்வேறு திட்-டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று, சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும். மாவட்டத்தில், 2025-26ம் கல்வியாண்டில், 103 அரசு பள்ளிகளை சேர்ந்த, 4,724 மாணவர், 5,337 மாணவியர் என மொத்தம், 10,061 பேருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.இவ்வாறு பேசினார்.மாநகராட்சி துணை மேயர் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, அரசுத்துறை அலுவலர்கள் உள்-பட பலர் பங்கேற்றனர்.