மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
27-Sep-2024
துாய்மை பணியாளருக்குஇலவச மருத்துவ முகாம்நாமக்கல், செப். 29-நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்தில், துாய்மையே சேவை-2024க்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் பிரபாகரன், தனம் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். முகாமில், எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மாலதி தலைமையில், மருத்துவர் குழுவினர், துாய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல், தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் நலக்கல்வி வழங்கப்பட்டது.நாமக்கல் ஒன்றியத்துக்குட்பட்ட, 25 கிராம பஞ்.,களில் பணியாற்றும், 150க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
27-Sep-2024